Header Ads

Header ADS

314 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 49.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் வெற்றி

 

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவம் இறுதியுமான ஒருநாள் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டுத் திடலில் இன்று (30) நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Ibrahim Zadran, 4 சிக்ஸர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 162 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக Kasun Rajitha, 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 314 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 49.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பாக Kusal Mendis 67 ஓட்டங்களையும் Charith Asalanka ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Rashid Khan 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

2 comments:

  1. Great article! A well-decorated space can completely transform the mood of a room. If you’re looking for unique designs, check out wallpaper options at Luxe Decor for both kids’ rooms and luxury wall decor.

    ReplyDelete

Powered by Blogger.