வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
நாளை (09) வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறைவழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் குறித்த முடிவை எடுத்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் குறித்த முடிவை ஏற்று, நாளை (09) வெள்ளிக்கிழமை அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளதாக, பேராயர் இல்லம் அறிவித்துள்ளது
No comments