Header Ads

Header ADS

நிலக்கீழ் மாளிகை எனது தேவைக்காக அமைக்கப்படவில்லை: மஹிந்த






ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய நிலக்கீழ் மாளிகை தமது சொந்த தேவைக்காக அமைக்கப்பட்டதல்லவென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டிடம், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யுத்த காலத்தில் பாதுகாப்பு குழு கூட்டத்தையும் குறித்த நிலக்கீழ் மாளிகையிலேயே தாம் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் நுட்பமான அதிநவீன முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த மாளிகை தொடர்பில், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தியதையடுத்து, அதனை பார்வையிட நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் அழைத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-

No comments

Powered by Blogger.