Header Ads

Header ADS

குச்சவெளி் பிரதேச சபைக்குட்பட்ட காணிப் பிரச்சினை தொர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு

குச்சவெளி் பிரதேச சபைக்குட்பட்ட காணிப் பிரச்சினை தொர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு!
குச்சவெளி் பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை, அரசிமலை, பொன்மலைக்குடா மற்றும் குச்சவெளி பிரதேச காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு (27) இடம்பெற்றது. குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.முபாறக் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக்கின் ஏற்பாட்டில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாக்கிய ரவூப் ஹக்கீம் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. புல்மோட்டை அரசிமலை, பொன்மலைக்குடா, குச்சவெளி பிரதேசத்திலுள்ள காணிகள் பல தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதனால் அவ்விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றியும், திருமலை மாவட்டத்தின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது, விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறித்த பிரதேசங்களின் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட காணிப் பிரச்சினைகளுக்கான உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க காணி திட்டமிடல் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்டத்தின் ஏனைய பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வினை பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது உறுதியளித்துள்ளதுடன், சில பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டதாகவும் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.