Header Ads

Header ADS

ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்!

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 19 வது ஆண்டு நிறைவும், வருடாந்த ஒன்றுகூடலுடன் புதிய நிருவாகத் தெரிவும் எதிர்வரும் 2023.09.30 ஆம் திகதி பொத்துவில் தனியார் விடுதியில் இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தெரிவித்தார். ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழுத் தலைவருமான எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்த ஒன்றுகூடலின்போது கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பலவிடயங்கள் பற்றியும், ஒன்றியத்தின் எதிர்காலத்திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதன் பின்னர் புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார். ஒன்றியத்தின் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அன்றையதினம் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாகவும், ஒன்றியத்தின் ஊடகவியலாளர்களை இவ்வருட இறுதியில் கௌரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.