மிலாத்தூன் நபிவிழா வாழ்த்து செய்தியில் கௌரவ எம்.யூ.எம். அலி சப்ரி ஜனாதிபதி சட்டத்தரணி, வெளிவிவகார அமைச்சர் சமாதனம் மற்றும் சாந்தி நிறைந்த நிறைவான செழிப்பான வாழ்வை அனைவரும் பெற்றிட பிரார்த்திப்பதோடு மீலாதுன் நபி தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
மீலாத் தின செய்தி:
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த புனித ரபி அல்-அவ்வல் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்கள். புனித அல்-குர்ஆன் கூறிய பிரகாரம், 1.8 பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் தங்களது இறுதி தூதராகவும், உலகம் அழியும் வரையுள்ள அனைத்து மனித குலத்திற்கும் ஒரு வழிகாட்டியாகவும் பின்பற்றப்படுகின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசம்கொள்கின்ற அனைத்து மக்களுக்கும் இன்றைய நாள் சிறந்த நாளாகும்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் 7ஆம் நூற்றாண்டிலிருந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய முறைகளை கடைப்பிடித்து, அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டின் அனைத்து சமூகங்களுடனும் சகோதரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். உலகில் வேறு எங்கும் இல்லாத தனித்துவமான அடையாளத்தை இலங்கை இஸ்லாமியர்கள் கொண்டுள்ளனர். அண்மைக்காலமாக ஒரு சில தீவிரவாத சக்திகள் இந்த பிணைப்பை சேதப்படுத்த முயற்சித்த போதிலும், இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் நாட்டின் மீதும் ஏனைய சமூகங்கள் மீதும் எப்போதும் நேசத்துடன் நெருக்கமான தொடர்பை பேணி வருகின்றமையை காண்கின்றமை மகிழ்ச்சிகரமானதாகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. தனக்கு ஏற்பட்ட சோதனைகளின் போதும், அவர் சக மனிதர்களிடம் அன்பு, கருணை, பணிவு, தொண்டு, சகோதரத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை போதித்து அவற்றை செயலுருவிலும் முன்மாதிரியாக காண்பித்தவராவார்.
'உங்களில் சிறந்தவர்கள் பிறருக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தருபவர்கள்' என்ற நபிகளாரின் வார்த்தையின் பிரகாரம் பல படிப்பினைகளை எடுத்து நடக்க வேண்டியதும் எமது தலையாய கடமையாகும். அவ்வாறான நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தற்போதுள்ள சோதனை மிகுந்த கால கட்டத்தில் முழு மனிதகுலத்தையும், நமது நாட்டையும் உயர்வடையச் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிராத்திக்க வேண்டும்.
அத்துடன், இந்த சிறப்புமிகு நன்நாளில், சமாதனம் மற்றும் சாந்தி நிறைந்த நிறைவான செழிப்பான வாழ்வை அனைவரும் பெற்றிட பிரார்த்திப்பதோடு மீலாதுன் நபி தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
கௌரவ எம்.யூ.எம். அலி சப்ரி
ஜனாதிபதி சட்டத்தரணி,
வெளிவிவகார அமைச்சர்
No comments