Header Ads

Header ADS

பாகிஸ்தான் சித் மாநிலத்திற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு சிந் மாநில முதலமைச்சர் மக்பூல் பக்காரு அழைப்பு!

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாகிஸ்தான் நாட்டின் சிந் மாநில முதலமைச்சர் மக்பூல் பக்காருக்கும், இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலில், இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் மேசன்,ஆடை தொழிற்சாலை,மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி துறை உட்பட பல நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். அவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு செந்தில் தொண்டமான் கொண்டு சென்றார். செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முதலமைச்சர் மக்பூல் பக்காரு ஒப்புக்கொண்டதுடன், பாகிஸ்தானில் உள்ள சித் மாநிலத்திற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு உத்தியோகபூர்வ அழைப்பும் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.