Header Ads

Header ADS

சர்வதேச சுனாமி அனர்த்த ஒத்திகை வேலைத்திட்டம்

சர்வதேச சுனாமி அனர்த்த ஒத்திகை வேலைத்திட்டம். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் 'சர்வதேச சுனாமி அனர்த்த ஒத்திகை வேலைத்திட்டம்' நாளை (04/10/2023) மு.ப 9.30 மணி முதல் மு.ப 11.30 மணி வரை குச்சவெளி பிரதேச செயலகத்தின் செந்தூர், ஜாயாநகர் மற்றும் காசிம் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை மையப்படுத்தி நடைபெறவுள்ளது. இதன்படி, செந்தூர் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட புடவைக்கட்டு, மருதங்குடா மற்றும் ஜாயா நகர் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட, சாகரபுர ஆகிய மூன்று கிராமங்களில் வசிக்கும் சுனாமியால் பாதிக்கப்படக்கூடிய 200 குடும்பங்களும், காசிம் நகர் அன்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 510 மாணவர்கள் மற்றும் அதிபர் உட்பட 15 ஆசிரியர்கள் இந்த சர்வதேச ஒத்திகைப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் வேலைத்திட்டமானது சுனாமி அனர்த்த ஒத்திகை வேலைத்திட்டமாகும். இதனால் பொதுமக்கள் அனைவரும் பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இந்து சமுத்திர வலய நாடுகளில் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வலய சுனாமி அனர்த்த ஒத்திகையே இவ்வேலைத்திட்டமாகும். editor mulli1stnews.lk

No comments

Powered by Blogger.