Header Ads

Header ADS

திறந்து வைத்த வைத்தியசாலைகளின் கட்டடங்களை மீண்டும் திறக்கப்போகும் கிழக்கு ஆளுநர்!

ஆளுநரை முந்திய பணிப்பாளர்! திறந்து வைத்த வைத்தியசாலைகளின் கட்டடங்களை மீண்டும் திறக்கப்போகும் கிழக்கு ஆளுநர்! திறந்து வைத்து 15 நாட்கள்கூட செல்லாத நிலையில் மீண்டும் திறப்பு விழா! திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களை ஆளுநர் திறந்து வைப்பாரா???? இருந்துதான் பார்ப்போம்! உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் (PSSP) திட்டத்தினூடாக பனங்காடு, அன்னமலை மற்றும் தீகவாபி போன்ற பிரதேச வைத்தியசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடிக் கட்டடங்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் திறந்து வைத்து, அவற்றை மக்கள் பாவனைக்கும் கையளித்துவிட்டார். இவ்வாறு, கடந்த 2023/11/03 ஆம் திகதி தீகவாபி பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடிக் கட்டடத்தையும், 2023/11/04 ஆம் திகதி அன்னமலை பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடிக் கட்டடத்தையும், 2023/11/13 ஆம் திகதி பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடிக் கட்டடத்தையும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் திறந்து வைக்கப்பட்டு அவைகள் இயங்கியும் வருகிறன. இச்செய்தி சகல இணையத்தளங்களிலும், பத்திரிகைகளிலும், கல்முனை பிராந்திய முகநூல் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த, வைத்தியசாலைகளின் கட்டடத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டில்கூட அவரின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பித்ததுள்ளார். அதற்கமைவாக, அந்த கல்வெட்டில் அவரின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த வைத்தியசாலைகளின் 2 மாடிக் கட்டடங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் மீண்டும் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. கிழக்கின் முதல் மகனாகப் பார்க்கப்படுகிற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மிஞ்சி, அவரின் அதிகாரப்போக்கில் குறித்த வைத்தியசாலைகளின் கட்டடங்களை திறந்து வைத்துள்ளார். இச்செயற்பாட்டை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு திறந்து வைத்த கட்டடங்களை ஆளுநர் திறந்து வைப்பாரா??? அப்படித் திறந்து வைத்தால் அவரின் பதவிக்கு இழிவான செயற்பாடாக இருக்கும் அல்லவா??? என்று அம்பாறை மாவட்ட பொதுமக்களால் மிகப் பரவலாக பேசப்படும் பேசு பொருளாக இது மாறியுள்ளது.

No comments

Powered by Blogger.