கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்கள் வழங்கும் திட்டம் ஆரம்பம்!
கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்கள்
வழங்கும் திட்டம் ஆரம்பம்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப்
பார்வைக்கு அமைவாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலின் பேரில் கிழக்கு
மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாதணி வவுச்சர்களை வழங்கும் செயல்பாடு கிழக்கு மாகாண
ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம்
முழுவதிலும் உள்ள 677 கிராமிய பாடசாலைகளைச் சேர்ந்த 1,57,698 மாணவர்களை இனங்கண்டு
3000 ரூபா பெறுமதியான இலவச பாதணி வவுச்சர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்
தொண்டமான் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது
No comments