Header Ads

Header ADS

தாய்லாந்து நிலநடுக்கம் குறித்து முன்னாள் துணை பிரதமர் கொர்ன் டபரன்சியுடன் உரையாடிய இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!

தாய்லாந்து நிலநடுக்கம் குறித்து முன்னாள் துணை பிரதமர் கொர்ன் டபரன்சியுடன் உரையாடிய இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
தாய்லாந்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்துள்ளனர். தாய்லாந்தின் நிலைமைகள் குறித்து தாய்லாந்தின் முன்னாள் துணை பிரதமர் கொர்ன் டபரன்சியிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், தொலைபேசியில் உரையாடியதுடன், இக்கடினமான சூழ்நிலையில் இலங்கை மக்கள் தாய்லாந்து மக்களுடன் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் தாய்லாந்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திப்பதாகவும் செந்தில் தொண்டமான், முன்னாள் துணை பிரதமர் கொர்ன் டபரன்சியிடன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.