Header Ads

Header ADS

2025 ஆம் ஆண்டுக்கான பியர்சன் எடெக்சல் சர்வதேச தேர்வில் (International Pearson Edexcel Examinations - 2025) அதிஉயர் புள்ளிகளைப் பெற்று உலக சாதனை படைத்த ரியாத் இலங்கை சர்வதேச பாடசாலையின் ஏழு மாணவர்களை சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவரும் ரியாதில் இயங்கி வரும் இலங்கை சர்வதேச பாடசாலையின் போசகருமாகிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் பாராட்டினார்கள். மேற்குறித்த பாராட்டு நிகழ்வு

2025 ஆம் ஆண்டுக்கான பியர்சன் எடெக்சல் சர்வதேச தேர்வில் (International Pearson Edexcel Examinations - 2025) அதிஉயர் புள்ளிகளைப் பெற்று உலக சாதனை படைத்த ரியாத் இலங்கை சர்வதேச பாடசாலையின் ஏழு மாணவர்களை சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவரும் ரியாதில் இயங்கி வரும் இலங்கை சர்வதேச பாடசாலையின் போசகருமாகிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் பாராட்டினார்கள். மேற்குறித்த பாராட்டு நிகழ்வு
, 2025.11.25 ஆந் திகதி பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. சர்வதேசரீதியில் அதிகூடிய புள்ளிகளை பெற்று " உலக சாதனையை முறியடித்த" மாணவர்களாகிய அரஷ் அம்ரி அன்பாஸ் (iPrimary English), யஹ்யா மொஹமட் மின்ஹாஜ் (iPrimary Mathematics), அம்னா மொஹமட் இஹ்ஸான் (IGCSE Mathematics A), ருஸ்மி இஸ்மத் சானீஸ் (IGCSE Mathematics A), அருஷன் ரத்னென்ந்ரன் (IAS Business), அஹ்மத் மாஸின் மொஹமட் முனாஸ் (IAS Economics) மற்றும் மஹரம்ப மஹா ஆசாரிகே மெனுலா போசிலு மஹரம்பகே ( IAS Economics) ஆகியோராவர். மேலும், மத்திய கிழக்கு மட்டத்திலும் சவுதி அரேபிய தேசிய மட்டத்திலும் பதினொரு மாணவர்கள் பல்வேறு பாடங்களிலும் உயர் புள்ளிகளை பெற்றுள்ளதுடன், இவற்றுடன் மற்றும் பல உயர் அடைவுகளை பெற்றுக் கொண்ட 52 மாணவமாணவிகளும் பாராட்டப்பட்டனர். உலக சாதனையை முறியடித்த மற்றும் உயர் அடைவுகளைப் பெற்றுக் கொண்ட ரியாத் இலங்கை சர்வதேச பாடசாலையின் மாணவமாணவிகளுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், 2024-2025 கல்வியாண்டின் இந்த அடைவானது, ரியாத் இலங்கை சர்வதேச பாடசாலையின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக அடையப்பெற்ற மைல்கல்லாகும் என்பதுடன், இத்தகைய அதிஉயர் அடைவினை கொண்டாடுவதானது, ரியாத் இலங்கை சர்வதேச பாடசாலை மத்திய கிழக்கில் சிறந்த பெறுபேறுகளையும் அடைவுகளையும் உருவாக்கும் பாடசாலை மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் சாதனைகளை படைக்கும் ஒரு கல்வி நிறுவனம் என்பதற்கான ஒரு சான்றாக அமைகின்றது என குறிப்பிட்டதுடன், இந்த வரலாற்றுரீதியான அடைவினை கொண்டாடும் வகையில், கௌரவ தூதுவர், இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்குமிடையிலான இராஜதந்திர உறவின் 50 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட தபால் முத்திரையை உள்ளடக்கிய நினைவுச் சின்னத்தினையும் வழங்கி வைத்தார். சவுதி அரேபிய கல்வி அமைச்சின் தனியார் பாடசாலைகளுக்கு பொறுப்பான பிரதான மேற்பார்வை அதிகாரி கலாநிதி முஹ்ஸின் அப்துள்ளாஹ் அல் காரானி, இலங்கை தூதரக பிரதானியும் அமைச்சருமான மொஹமட் அனஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன், ரியாத் இலங்கை சர்வதேச பாடசாலை அதிபர் கலாநிதி ருக்சான் ரஸாக், ஆசிரியர் குழாம் மற்றும் திரு. சப்ராஸ், திரு. இர்சாத் ஆகியோரின் தலைமையிலான பெற்றோர்- ஆசிரியர்கள் அமைப்பின் (PTA) அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட நலன்விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.