Header Ads

Header ADS

உலக அரபு மொழி தினம் 2025 எழுத்து: இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி

உலக அரபு மொழி தினம் 2025 எழுத்து: இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி
பல நூற்றாண்டுகளாக அறிவுக்கான களனாகவும், மனித சிந்தனைக்கு ஊற்றாகவும் விளங்கி, அறிவியல் துறையை வளர்ப்பதிலும் நாகரிகங்களைக் கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மொழியான அரபு மொழியைக் கொண்டாடும் தினம் இன்றாகும். அரபு மொழியானது மொழிச் செழுமையும் கட்டமைப்பில் நெகிழ்வுத்தன்மையும் கொண்ட ஒரு பண்டைய வரலாற்று மொழி மட்டுமல்ல, மாறாக காலத்தின் மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வளைந்து கொடுக்கும் திறன் கொண்ட உயிரோட்டமான மொழியாகும். அரபு மொழி அதன் நாகரிக முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதிகாரப்பூர்வ மற்றும் நிறுவன மட்டங்களில் அதிகரிக்கும் கவனத்தைப் பெற்றுள்ளது. இது கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துவதிலும், சுதேச உணர்வை உறுதிப்படுத்துவதிலும், கல்வி, அறிவு மற்றும் புத்தாக்க துறைகளுக்கு ஆதரவளிப்பதிலும் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாகும். இதனடிப்படையில், சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டம், கல்வி, ஊடகம், கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியின் பாவனையை வலுப்படுத்துவதன் மூலம், அரபு மொழியின் உள்வாங்கலை மேம்படுத்தி, மொழியை கலாச்சார மற்றும் அறிவு மேம்பாட்டு திட்டங்களுடன் இணைப்பதன் மூலம், தனிநபர் கட்டமைப்பிலும் சமூக வளர்ச்சியிலும் அரபு மொழி ஒரு அடிப்படை கூறாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அரபு மொழிக்கான மன்னர் சல்மான் உலகளாவிய அகாடமி, அரபு மொழிக்குச் சேவை செய்யும் ஒரு முன்னேற்றமான நிறுவனமாக திகழ்கிறது. மொழிசார் திட்டமிடல், அகராதிகள் மற்றும் மொழித் தரவுத்தொகுப்புகள் உருவாக்கம், அறிவியல் ஆய்வுகளுக்கு ஆதரவு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியின் பயன்பாட்டை ஊக்குவித்தல், மேலும் சர்வதேச கூட்டாண்மைகள் உருவாக்கி திறமைகளை உருவாக்குதல் போன்ற சிறப்பு அறிவியல் பங்குகளை அது மேற்கொள்கிறது. இதன் மூலம், அரபு மொழியின் செயல்திறனை உயர்த்தி, அதன் உலகளாவிய இருப்பை வலுப்படுத்துகிறது. உலக அரபு மொழி தினத்தைக் கொண்டாடுவது, அதன் நாகரிக மதிப்பு கலாச்சார வளர்ச்சியில் அதன் பங்களிப்பும் குறித்த அதிகரிக்கும் விழிப்புணர்வை உறுதிப்படுத்துவதோடு, இன்றைய உலகின் வேகமான மாற்றங்களுடன் ஒத்திசைவதற்காக அரபு மொழியை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உள்ள உறுதிப்பாட்டை புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இறுதியாக, அரபு மொழியானது புதுப்பித்தலும் பங்களிப்பும் செய்யக்கூடிய ஒரு உயிருள்ள மொழியாகத் தொடர்ந்து திகழ்கிறது; மேலும், அதிக தொடர்பாடலும் படைப்பாற்றலும் நிறைந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் அதன் கலாச்சார மற்றும் அறிவுப் பங்கு தெளிவாக வெளிப்படுகிறது.

No comments

Powered by Blogger.