Header Ads

Header ADS

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய புதிய அதிபராக சராப்தீன் நசீரா கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய புதிய அதிபராக சராப்தீன் நசீரா கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின்( தேசிய பாடசாலை) புதிய அதிபராக, அதிபர் தரம் 2 ஐச் சேர்ந்த சராப்தீன் நசீரா இன்று(13) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 2007 ஆண்டு தேசிய கல்வி கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் விஞ்ஞான பாட டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்த இவர், 2011 ஆண்டு இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூல விஞ்ஞான பட்டதாரியானார். 2018 இல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டத்தை பெற்றுக்கொண்டதோடு, இலங்கை சட்டக் கல்லூரியில் 2020 ஆண்டு சட்ட வழக்கறிஞர் (attorney at law ) பயிற்சியினையும் இவர், பூர்த்தி செய்துள்ளார். மேலும் 2014 ஆம் ஆண்டு இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் சிறப்புச் சான்றிதழ் பயிற்சி நெறியை (Certificate in English for academic purpose open university) பூர்த்தி செய்த, இவர், பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான டிப்ளமோ கற்கையினையும் நிறைவு செய்துள்ளார். 2016 ஆம் ஆண்டு, அதிபர் போட்டி பரீட்சையில் சித்தி அடைந்து, இதே பாடசாலையிலே, பிரதி அதிபராக நியமிக்கப்பட்ட இவர், தற்போது அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.