வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
වෙරුගල් ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ කට්ටයාරු පාලම ඉදිකර ජනතා අයිතියට පත් කිරීම ඊයේ (25) දින ග්රාමීය මාර්ග සංවර්ධන රාජ්ය අමාත්ය සිවනේෂ්තුරෙයි චන්ද්රකාන්තන් මැතුතුමාගේ ප්රධානත්වයෙන් සිදුකරන ලදි.
ග්රාමීය මාර්ග සංවර්ධන රාජ්ය අමාත්යාංශයේ මුල්ය ප්රතිපාදන මත රුපියල් මිලියන 50ක් වියදම් කරමින මෙම පාළම ඉදිකර ඇත.
කැට්ටයාරු පාලම ඉදිකිරීමෙන් වෙරුගල් ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ ගොවීන් 1500කට වැඩි පිරිසකට සෙත සැලසේ.
මෙම අවස්ථාවට ග්රාමීය මාර්ග සංවර්ධන රාජ්ය අමාත්ය ශිවනේසතුරෙයි චන්ද්රකාන්තන්, ත්රිකුණාමලය දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී කපිල නුවන් අතුකෝරල, නැගෙනහිර පළාත් මාර්ග සංවර්ධන දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂ, ප්රධාන අධ්යක්ෂ, වෙරුගල් ප්රාදේශීය ලේකම්, වෙරුගල් ප්රාදේශීය සභා ලේකම් ඇතුළු විශාල පිරිසක් සහභාගී වීම විශේෂත්වයකි.
வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் இன்று திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் இன்று திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
50 மில்லியன் ரூபாய் செலவில் வெருகல் -கட்டையாறுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வெருகல் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.
இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர், பிரதம பணிப்பாளர், வெருகல் பிரதேச செயலாளர், வெருகல் பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
priyan corr
kanthalai
No comments