இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்து வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 09 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை
இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்து வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 09 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்
அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 09 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய சி. கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.
குறித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை (வாக்கு சீட்டு இலக்கம்) செலுத்தி தமது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்து விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்த வாக்குளை அறியும் வசதியும் காணப்படுகின்றது. போலியான முறையில் மீண்டும் ஒருவர் வாக்குகளை அளிக்க முயன்றால் அதனை அந்த இயந்திரம் நிராகரித்து குறித்த நபரை வெளிப்படுத்தும் வகையில் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட புத்தாக்க போட்டியில் குறித்த மாணவர் முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன், மாகாணத்தில் 02 ஆம் இடத்தையும், தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் குறித்த கண்டுபிடிப்பு பெற்றுள்ளது.
இது குறித்து சி.கபிலாஸ் கருத்து தெரிவிக்கையில், "கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் செலவுகள் அதிகமாக காணப்பட்டதாக எமது பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அதனை குறைக்கும் வகையில் ஏதாவது செய்ய முடியுமா? என புத்தரதாக்க போட்டியில் சிந்தித்தேன். அதன் விளைவே இந்த இயந்திரமாகும்.
அத்துடன், குறித்த இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்தித்தை மேலும் மெருகூட்டி எதிர்காலத்தில் தேர்தல்களில பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது. பாடசாலையின் மாணவர் பாராளுன்ற தேர்தலில் குறித்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
தேர்தல் செலவுகளை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள ஜனாதிபதி எனது இக்கண்டு பிடிப்பை பார்வையிட்டு, செலவு குறைந்த முறையில் வாக்களிக்க கூடியதாக இவ்வாறான இயந்திரத்தை மெருகூட்டி பயன்படுத்த தனக்கு உதவ வேண்டும் என்றும் குறித்த மாணவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments