கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வராக, கடமையேற்ற விஷேட பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் தெ.சுந்தரேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வராக, கடமையேற்ற விஷேட பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் தெ.சுந்தரேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
சிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்னாள் பீடாதிபதியும், விஷேட பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் தெட்சிணாமூர்த்தி சுந்தரேசன் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வராக கடந்த (12) கடமையை பொறுப்பேற்றார்.
இவர், உயர்கல்வித்துறையில் தேசிய, சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட கல்விப் பணிகளையாற்றிவரும் இவர், சிறந்த மனிதநேயப் பணியாளராக, பல சமூக மற்றும் ஆன்மீக அமைப்புகள் ஊடாக தனது பணிகளைச் செய்து வருகின்றவராகவும் இருக்கின்றார்.
மருத்துவ சேவைக்கப்பால் சிறந்த கல்வியலாளராக திகழ்ந்துவரும் இவர், சிறந்த ஆய்வாளராகவும், சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், மருத்துவம், ஆன்மீகம் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த பல நூல்களையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments