LDO காணி அனுமதி & அளிப்பு பத்திரம் – இரத்து (Cancel) செய்து மீளப்பெறமுடியும் அதற்கான உண்மையான காரணங்கள் இதோ...!
LDO காணி அனுமதி & அளிப்பு பத்திரம் – இரத்து (Cancel) செய்து மீளப்பெறமுடியும் அதற்கான உண்மையான காரணங்கள் இதோ...!
பலர் அரசாங்கத்திடம் இருந்தை காணியினைப் பெற்ற பிறகு அதை தங்களது சொந்த தனிநபர் சொத்தாகவே நினைத்து விடுகின்றனர்...!
ஆனால் Land Development Ordinance (LDO) காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் அதற்கும் மேலே சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது!
அதில் உள்ள சில சட்டப்பிரிவுகள் உங்கள் அனுமதி (Permit) அல்லது அளிப்பு பத்திரத்தையே (Grant) இனையே இரத்து செய்யக்கூடிய சக்தி கொண்டவை.
மேற்படி இரண்டு பிரிவுகளின் கீழ் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யும் அதிகாரம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
Cancellation of Permit : Section 109 (1) and Section 110 (1) of Land Development Ordinance.
1. அனுமதிப் பத்திரம் (Permit) – Sections 106 - 118 LDO
நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டால், அரசாங்கம் உங்கள் காட்சிக்கான பத்திரத்தை இரத்து செய்யலாம்:
01. காணிக்கு விதிக்கப்பட்ட பாவனை நிபந்தனைகளை மீறல்.
02. காணியை கைவிட்டுவிடல் (Abandon)/ மாற்றுதல் (Transfer)/ வாடகைக்கு (Rent Out) விடல்.
03. காணியை குறித்து ஒதுக்கப்பட்ட உற்பத்திக்குப் பயன்படுத்தாமை.
04. தவறான தகவல் மற்றும் விபரங்கள் வழங்கி அனுமதி பத்திரம் பெற்றிருத்தல்.
05. நிலக்கட்டணங்கள் வரிகள் மற்றும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்தாதிருத்தல்.
06. சட்டத்திற்கு புறம்பான விடயங்கள் எதற்கும் பயன்படுத்துவது உறுதிப் படுத்தப்பட்டால்.
#எச்சரிக்கை! – ஆனால் குறித்த பத்திரத்தை இரத்து செய்யும் முன் விசாரணை நடக்க வேண்டும்;
#உங்களுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.
2. அளிப்பு பத்திரம் (Grant) – Section 104 - 104D of LDO
காணிக்கு நீங்கள் அளிப்பு பத்திரம் பெற்றிருத்தல் இது ஒரு நிலையான உரிமை போல தோன்றினாலும், சில நேரங்களில் இரத்து செய்து மீளப்பெறப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.
Cancellation of Grant : Section 104 of Land Development Ordinance
01. மோசடி மற்றும் தவறான தகவல் வழங்குவதன் மூலம் பெற்றிருத்தல்.
02. சட்டப்படி தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படாமை.
03. அரசின் பொது நலனுக்காக (Public Purpose) குறித்த காணி தேவைப்பட்டால்.
03. ஏதேனும் நீதிமன்றம் குறித்த அளிப்பு பத்திரம் செல்லாது என அறிவித்தால் அல்லது தீர்ப்பு/கட்டளை பிறப்பித்தால்.
04. சட்டத்திற்கு புறம்பான நோக்கங்கள் எதற்கும் பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டால்.
(மேற்படி நிபந்தனைகள் மற்றும் விதிகளை உங்களுடைய Permit or Grant பத்திரத்தின் இரண்டாம் ஆதன அட்டவணையில் (Second Schedule) நீங்கள் காணலாம்.)
முக்கிய வழக்குகள் :
01. Siripala v. Land Commissioner (1980) 2 Sri LR 63
– விசாரணை இல்லாமல் ரத்து செய்தது தவறு என தீர்மானம்.
02. Fernando v. Government Agent,
Galle (1992) 1 Sri LR 235
– அறிவிப்பின்றி ரத்து செய்ததால் நீதிமன்றம் செல்லாது என கூறியது.
“அரசின் நிலம் என்பது நல்ல நோக்கத்தில் பொது நம்பிக்கையின் கீழ் மக்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் நிபந்தனைகள் மற்றும் விதிகளை மதிக்காதவர் உரிமையை இழக்க நேரிடும்.”
நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
#LandLaw#SriLankaLaw#LDO#LegalAwareness#LawAndJustice#TamilLaw#PublicTrustDoctrine#LandRights#LegalTamilPost#KamsanLaw
Disclaimer:
இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. சட்ட ஆலோசனைக்காக தகுந்த உங்களுடைய அல்லது நீங்கள் விரும்பும் சட்டத்தரணியுடன் கலந்தாலோசிக்கவும்.




No comments