4வது தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழா போட்டியில் ஜனாப் R.M.நிப்ராஸ் 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் 3ம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை சுவிகரித்து தந்தமைக்கு பாராட்டு விழா
4வது தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழா
2025ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 4வது சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழா போட்டியில் ஜனாப் R.M.நிப்ராஸ் 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் 3ம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்து நமது தம்பலகாம பிரதேச மண்னுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவருக்கான கெளரவிப்பு இன்று (03) நிகழ்வு தம்பலகாம பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த R.M.நிப்ராஸ் தனக்கான இந்த கெளரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்த பிரதேச செயலாளருக்கும் தன்னை இந்த வெற்றியை அடைவதற்கு முழு திறனுடன் பயிற்றுவிப்பை வழங்கிய பயிற்றுவிப்பாளர் k.m.ஹாரிஸ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.





No comments