Header Ads

Header ADS

அரச அறிவிப்பு | கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறை

அரச அறிவிப்பு | கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறை
கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்: 📞 1905 📞 ஜனாதிபதி செயலகம்: 011 235 4354 011 235 4655 011 248 4500 / 600 / 700 முறைப்பாடு செய்யும்போது வழங்க வேண்டிய விவரங்கள்: 1. கிராம சேவகரின் பெயர் 2. அவர் பணியாற்றும் கிராம சேவை பிரிவு 3. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவு 4. மாவட்டம் 5. நீங்கள் பாதிக்கப்பட்ட விவரம் அல்லது – கிராம சேவகர் ஊடாக பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடி கொடுப்பனவுகள் / முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் மொழி வசதி: 🗣️ தமிழ், சிங்களம், ஆங்கிலம் – மூன்று மொழிகளிலும் உங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும். அரசின் உறுதி: யாரிடமும் சென்று கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்கள் உரிமையை முதலில் உங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் கேளுங்கள். தவறு தொடர்ந்தால், அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொடர்பு இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் செய்யுங்கள். நிச்சயமாக, உங்கள் உரிமைக்கான நீதி காலதாமதமின்றி கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது. இந்த தகவலை பொதுமக்களின் நலனுக்காக பகிருங்கள்.

No comments

Powered by Blogger.