ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டுச் சமூகத்தை உருவாக்குவோம்” முள்ளிப்பொத்தானையில் ஜும்ஆ பிரசங்கம்"
ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டுச் சமூகத்தை உருவாக்குவோம்” முள்ளிப்பொத்தானையில் ஜும்ஆ பிரசங்கம்"
ஜனாதிபதியின் “Clean Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக, திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை அல்-அஹ்ஸா ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட ஜும்ஆ பிரசங்க நிகழ்வு நேற்று (31) நடைபெற்றது.
இந்நிகழ்வில் “ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டுச் சமூகத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் உரையாற்றியவர், முள்ளிப்பொத்தானை மைமூனா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகரும் பணிப்பாளரும், அல்-அஹ்ஸா ஜும்ஆ பள்ளிவாசலின் பொருளாளரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முள்ளிப்பொத்தானை கல்விக்குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க் முஜீப் ரஹ்மான் (ரஹ்மானி) ஆவார்.
தனது உரையில் அவர், சமூகத்தில் நேர்மை, ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயப் பண்புகளை வளர்த்தெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
மேலும், ஜனாதிபதியின் “Clean Sri Lanka” தேசிய செயற்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் அதன் மூலம் நாட்டில் நல்லாட்சியையும் சமூகப் பொறுப்புணர்வையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், மதப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து துஆ பிரார்தனைகளும் இடம்பெற்றது சிறப்பம்சாமாகும்








No comments