Header Ads

Header ADS

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்த தான நிகழ்வு

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்த தான நிகழ்வு
தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதீசேகரன் அவர்களின் தலைமையில், தம்பலகாமம் பிரதேச செயலக பௌத்த சங்கம் ஏற்பாடு செய்த தான நிகழ்வு 2026.08.04 அன்று பிரதேச செயலக மண்டபத்தில் பௌத்த மதகுருமார்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தில் பணியாற்றிய காலத்தில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் ஆத்ம சாந்திக்காக புண்ணிய போதனை இடம்பெற்றதுடன், தற்போது சேவையாற்றி வரும் அனைத்து உத்தியோகத்தர்களின் நலன், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் சேவைச் சிறப்பிற்காக ஆசீர்வாத பூஜைகளும் நடத்தப்பட்டன. நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஆர். பிரசாந்தன், பிரிவு தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு மத அனுஷ்டானங்களில் பங்கேற்றனர். அரச சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உயிர்நீத்த அதிகாரிகளை நினைவு கூர்வதோடு, தற்போதைய அலுவலர்களின் நலன் மற்றும் பிரதேச செயலகத்தின் சேவைத் தரம் மேலும் உயர வேண்டும் என்ற நோக்கில் இந்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.