Header Ads

Header ADS

நீண்ட கால கனவை நனவாக்கிய மக்கள்

நீண்ட கால கனவை நனவாக்கிய மக்கள் கிண்ணியா இடிமன் புதுநகர் மக்களின் மிக நீண்ட கால கனவை நனவாக்கிய புது நகர் மக்கள் சந்தோச குதூகலத்தில் நேற்று இருந்ததை காண முடிந்தது. இதற்கு காரணம் இடிமன் புதுநகர் கிராம அபிவிருத்தி சங்கம் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக இங்கு இல்லாமல் இருந்தது தற்போது அம்மக்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எதிர் வரும் 2024/06/13ம் திகதி ஆரம்ப பொதுக் கூட்டமும் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற உள்ளது. என்பது மிக மகிழ்ச்சியான தருணமாக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நேற்று 2024/05/29ம் திகதி இரு பள்ளிவாயலிலும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு இடிமன் புதுநகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஆரம்ப பொதுக் கூட்டமும் அங்குராப்பணப் பொதுக்கூட்டமும் பற்றி அனைத்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இவ் அறிவித்தல் இருமுறை அதாவது அஸர், இஷா தொழுகைகளுக்கு பின் இரு பள்ளிகளிலும் அறிவிக்கப் பட்டது. RDOவின் பொது மக்களுக்கான அறிவித்தல் கடிதத்தை இடிமன் புதுநகர் இளைஞர்கள் பிரதி எடுத்து அப்பிரதேச பொது மக்களுக்கு வழங்கி மகிழ்ந்து கொண்டனர். இக் கடிதத்தை மக்களுக்காக பள்ளி வாயிலின் விளம்பரப் பலகையிலும் காட்சிப்படுத்தவும் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அது போலவே பொது மக்கள் அதிகம் ஒன்று கூடும் கடைகள், சேவீஸ் சென்டர், மற்றும் சலூன் கடைகளிலும் காணமுடிந்தது. இடிமன் புது நகர் மக்களின் பல வருட கனவு நனவாக அனைவரும் துஆ செய்து கொள்ளுங்கள். இந்த பணியை அம் மக்களின் நலன் விரும்பியுமான முன்னால் நடு ஊற்று கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பைசர் இஸ்மாயில் அவர்கள் கணவை நனவாக்க கடும் பிரேயத்தனம் செய்தே இங்கு நினைவு கூறவேண்டும். எனவும் அம்மக்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.